கோவாவில் நடைபெற்று வரும் 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற கையோடு சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம் என்றும் இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
கமலும், ரஜினியும் இணைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று ரஜினியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பின்னர் அனைவரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்போம். இதுகுறித்து தற்போது பேச விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அரசியலில் மிகப் பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிகழ்த்துவார்கள் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்