ETV Bharat / state

ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்? - rajini makkal mandram

சென்னை: பூத் கமிட்டி அமைப்பதில் சில மாவட்டச் செயலாளர்கள் ரஜினிக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி
ரஜினி
author img

By

Published : Mar 5, 2020, 4:44 PM IST

Updated : Mar 6, 2020, 7:34 AM IST

ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றும் வரை புதியதாக மாவட்டச் செயலாளர்களையோ, நிர்வாகிகளையோ நியமிக்க வாய்ப்பு இல்லை என ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எ.ஜே. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தலைமையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் கட்சி தொடங்குவது தொடர்பாக பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக கட்டமைப்பது தொடர்பாகவும், கட்சி அறிவிப்பு தேதி, மாநாடு நடத்த இடம் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எ.ஜே. ஸ்டாலின், 'தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் ரஜினிகாந்த் விசாரித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன மாதிரியான சூழல் இருக்கிறது. மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும், என்னென்ன திட்டங்கள் வகுக்க வேண்டும் என்ற கருத்துகளை ரஜினிகாந்த் அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் விவாதித்தார். அதேபோல் எங்களுடைய கருத்தையும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமின்றி நிறைய அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார். ஏற்கெனவே சொன்னதுபோல் மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்கள் மன்றம் சார்ந்த விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் மக்களின் மனநிலை என்ன, மாவட்டத்தின் பலம் என எல்லா விஷயங்களையும் கேட்டுக்கொண்டார். அனைவரும் கருத்துகளை தெரிவித்திருக்கிறோம். கட்சி ஆரம்பித்த பிறகு எந்தவிதமான கொள்கைகள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ரஜினிகாந்த் மட்டுமே கருத்தை தெரிவிப்பார்' என்றார்.

மேலும், ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கட்சிப் பணிகள் பற்றி விவாதித்ததாகவும் எனக்கு குறிப்பிட்ட ஒரு விஷயம் வருத்தத்தை தந்ததாகவும் அதை தற்போது கூற இயலாது எனவும் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் வருத்தம் குறித்து ரசிகர் மன்ற வட்டாரங்களில் விசாரித்ததில், பூத் கமிட்டி அமைப்பதில் சில மாவட்டங்களில் மந்த நிலை நிலவுவதாகவும் அதுவே ரஜினியின் வருத்தத்திற்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: உள்ளே நடந்தவற்றைக் கூற முடியாது’ - ஆலோசனைக்குப் பின்னர் ரஜினி பேட்டி

Last Updated : Mar 6, 2020, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.