சென்னை கோடம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மாநகராட்சி இணை ஆணையர் ஸ்ரீதர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் ஜே.எஸ்.டபிள்யூ. சிமெண்ட் நிறுவனம் சார்பில் மழைநீர் வீணாகாமல் சேமிக்க தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 39 இடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.
முதல்கட்டமாக மிக முக்கியமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தை கோடம்பாக்கம், மாம்பலம் ஆகிய பகுதிகளில் வல்லுநர் குழுவும், அரசு அலுவலர்களும் இணைந்து செயல்படுத்திவருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜே.எஸ்.டபிள்யூ. சிமெண்ட் நிறுவனத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "இத்திட்டம் மாநகராட்சியின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 3 புதிய பகுதிகள் கண்டறியப்பட்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆலத்தூரில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கிவைப்பு