ETV Bharat / state

தென்மேற்குப் பருவக்காற்று: தமிழ்நாடு,புதுவையில் மழை - chennai latest news

இன்று(செப்.09) முதல்13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-update
rain-update
author img

By

Published : Sep 9, 2021, 3:47 PM IST

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று (செப்.09) முதல் வரும் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

தேவலா (நீலகிரி) 16, பந்தலூர் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி) 5, கூடலூர் பஜார் (நீலகிரி) 4, பிறையார் எஸ்டேட் (நீலகிரி) 3, சேலம் (சேலம்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), பெரியாறு (தேனி), அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்

இன்று (செப்.09) முதல் 11.09.2021 வரை: தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்.12, 13 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதிகள்:

இன்று (செப்.09) முதல் 13ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மழை காலத்திற்கு தயாராகும் அரசு - பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.