ETV Bharat / state

வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை - chennai latest news

சென்னை: வெப்பச்சலனம், தெலங்கானா முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-update
rain-update
author img

By

Published : Jun 3, 2021, 2:11 PM IST

தெலங்கானா முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூன் 3) மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ஜூன் 04 : தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 05:டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள்,புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 05,07: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு :

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)

நாவலூர் (திருச்சிராப்பள்ளி) 12 செ.மீ, பாடாலூர் (பெரம்பலூர்) 7செ.மீ, புதுச்சத்திரம் (நாமக்கல்), சோலையாறு (கோவை), ஆத்தூர் (சேலம்) தலா 5 செ.மீ, திண்டுக்கல் , குமாரபாளையம் (நாமக்கல்) தலா 4 செ.மீ, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தலா 3 செ.மீ, நடுவட்டம் (நீலகிரி), பவானி (ஈரோடு), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஒகேனக்கல் (தர்மபுரி), உதகமண்டலம் தலா 2 செ.மீ, தோகைமலை (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), போடிநாய்க்கனுர் (தேனி) தலா 1செ.மீ,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஜூன் 03 : குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 03 முதல் ஜூன் 05 வரை: தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.