ETV Bharat / state

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. உங்கள் மாவட்டம் என்ன.? - tamil nadu rain alert districts

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Mar 24, 2023, 3:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

அதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 24) ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 25) ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 26ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 27, 28ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் லக்கூர் (கடலூர்) 8, தொழுதூர் (கடலூர்) 6, மணம்பூண்டி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), வெங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கிளச்செருவை (கடலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 4, வேப்பூர் (கடலூர்), செந்துறை (அரியலூர்), வெள்ளக்கோவில் (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), காட்டுமயிலூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேவைக்கு மீறி விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தாது.. அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.