ETV Bharat / state

ஏழைகளின் ரதம் என்று கருதப்படும் ரயில்கள் தனியார் மயமாவது வரமா, சாபமா? .

author img

By

Published : Sep 25, 2019, 11:52 PM IST

பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக விளங்கும் ரயில்வேத் துறையை தனியார்மயப்படுத்தி ரயில்களை இயக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Chennai Railway station

இந்தியாவில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது ரயில் சேவை என்றால் மிகையாகாது. இப்படி பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக விளங்கும் ரயில்வேத் துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில்களை இயக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இனிவரும் காலங்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, லட்சங்களில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்க இருப்பதாகக்கூறி எதிர்ப்புகளை சமாளித்து வருகிறது.

ஆனால் மத்திய அரசின் இந்தக் கூற்றைக் கடுமையாக எதிர்க்கும் ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், "இன்சூரன்ஸ் என்பது வெறும் ஏமாற்று வேலை, அது மட்டுமின்றி ரயில்வேத் துறை தனியார் மயமாக்கப்பட்டால், வருங்கால இளைய தலைமுறையினருக்கு, ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். மேலும், தற்போது மதுரை முதல் சென்னை வரை உள்ள ரயில் கட்டணம் மும்மடங்கு அதிகமாக உயர்த்தப்படும். இதனால் பாதிக்கப்படப் போவது அடிமட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள்தான். பெரும்பாலும் விமானத்தில் வசதியானவர்களே பயணிக்கின்றனர் வசதியற்றவர்கள் அதனை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதைப்போல், ரயில் பயணத்தையும் அவ்வாறு மாற்ற மத்திய அரசு முயல்கிறது” எனக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

SRMU against Railway department privatisation

இந்நிலையில், எந்தவித எதிர்ப்புகள் பற்றியும் கவலைப்படாமல் தனியார் ரயில்களை இயக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதலில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக லாபத்துடன் இயங்கும் ரயில் தடங்களை தனியாருக்குக் கொடுப்பதில் துவங்கி, அதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ரயில்கள் இயக்க அனுமதி வழங்குவது தொடர்பான டெண்டர் வழங்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, தமிழகத்தில் மதுரை, கோவை, பெங்களூர் வழித்தடங்கள் உள்பட ஆறுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு வாக்கில், இந்த வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இறுதியாக இந்தியாவில் 'ஏழைகளின் ரதம்’ என்று கருத்தப்பட்ட ரயில்களும் தனியார் மயமாவதால், மத்திய அரசு கூறுவது போல் சுகாதாரம் மற்றும் தரம் மேம்படும். ஆனால், இதனைக் கடுமையாக எதிர்க்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள் கூறுவதுபோல் வருங்காலத் தலைமுறையினருக்கு ரயில்வேப் பணிகள் மறுக்கப்பட்டு, கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, இன்று நாம் விமானங்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதுபோல் நாளை ரயில்களும் எட்டாக்கனி ஆகிவிடுமோ என்ற பயமே மேலோங்கியுள்ளது. இந்தத் தனியார்மயமாக்கல் வரமா, சாபமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இதையும் படிங்க: தனியார் மயமாகும் ரயில்வே -போராட இளைஞர்களுக்கு அழைப்பு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 25.09.19

ஏழைகளின் ரதம் என்று கருதப்படும் ரயில்கள் தனியார் மயமாவது வரமா...! சாபமா... சிறப்பு செய்தித் தொகுப்பு..

சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது ரயில் சேவை என்பது தெரிந்ததே.. அப்படி பொதுமக்களின் மிக அத்தியாவசிய போக்குவரத்தான ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில்களை இயக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் குறிப்பாக தனியார் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு லட்சங்களில் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்கின்றனர். மத்திய அரசின் இந்தக் கூற்றை கடுமையாக எதிர்க்கும் ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர், இன்சூரன்ஸ் என்பது வெறும் ஏமாற்று வேலை மட்டுமல்லாமல் தனியார் மயமாக்கப்பட்டால் இனி வரும் இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. மேலும், மதுரை முதல் சென்னை வரை தற்போது உள்ள கட்டணம் போல் மூன்று மடங்கு அதிகமாக உயர்த்துவார்கள், இதனால் பாதிக்கப்படப் போவது அடிமட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள்தான். விமானத்தில் பணக்காரர்கள் மட்டுமே பயணிக்க முடியும் ஏழைகள் அதனை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை போல் ரயில் பயணத்தையும் அவ்வாறு ஆக்க மத்திய அரசு முயல்கிறது என கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்..

இந்நிலையில் எந்தவித எதிர்ப்புகள் பற்றியும் கவலைப்படாமல் தனியார் ரயில்கள் இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளது. முதலில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக லாபத்துடன் இயங்கும் ரயில் தடங்களை தனியாருக்கு கொடுப்பது என்பதில் ஆரம்பித்து அதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ரயில்கள் இயக்க அனுமதி வழங்குவது தொடர்பான டெண்டர் வழங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் கூற்றுப்படி தமிழகத்தில் மதுரை, கோவை, பெங்களூர் வழித்தடங்கள் உள்பட ஆறுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இப்படிகள் 2020 ம் ஆண்டு வாக்கில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றனர்..

ஆக, ஏழைகளின் ரதம் என்று கருத்தப்பட்ட ரயில்களும் தனியார் மயமாவதால், மத்திய அரசு கூறுவது போல் சுகாதாரம் மற்றும் தரம் மேம்படும் என்றாலும், இதனை கடுமையாக எதிர்க்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள் கூறுவதைப் போல் ரயில்வே பணிகள் மறுக்கப்பட்டு, கட்டணங்கள் உயர்த்தப்பட்டு விமானங்களை பார்த்து பெருமூச்சு விடுவது போல் ரயில்களும் எட்டாக்கனி ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. இது வரமா...! சாபமா.. என்று...

இ.டி.வி பாரத் செய்திகளுக்காக ச.சிந்தலைபெருமாள்...

tn_che_05_special_story_of_privatization_of_Indian_railway_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.