மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை கொண்டு சமையல் செய்ததே விபத்துக்கான காரணம் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நிகழ்ந்த ரயில் பெட்டியில் இருந்து சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இந்திய ரயில்வே துறை சார்பில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதில், ரயில் பயணிகள் ரயிலில் கொண்டு செல்லக்கூடாத பொருள்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, "வெடிபொருள்கள், எளிதில் எரியக்கூடிய பொருள்கள் மற்றும் வெற்று எரிவாயு சிலிண்டர்கள் போன்றவைகள் பயணிகள் எடுத்துச்செல்லக்கூடாது.
மேலும், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவைகளையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு 20 கிலோ நெய் வரை கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலில் பயணிகள் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை ரயில் பயணிகளிடம் எளிதில் தீ எரியக்கூடிய பெட்ரோல், மண்ணெண்ணய், ஸ்டவ் அடுப்பு, பட்டாசுகள் போன்றவற்றை கொண்டு சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் விதிமுறைகள் ஏற்கனவே அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?