ETV Bharat / state

'வெறிநாய் கடித்தால் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'

வெறிநாய் கடித்தால் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார்.

'வெறிநாய் கடித்தால் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'

author img

By

Published : Sep 29, 2021, 4:15 PM IST

சென்னை: உலக வெறிநாய் கடி தடுப்பு தினம் இன்று (செப்.29) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவர் ராணி கவுர் பானர்ஜி, தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் செல்வக்குமார், "வெறிநாய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் இருக்கிறது. ஆண்டுதோறும் உலகளவில் 55 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

'வெறிநாய் கடித்தால் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'

தடுப்பூசி கட்டாயம்

நாய் கடித்தால் மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

நாய் கடித்து அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நாய் கடித்தால் சுண்ணாம்பு வைத்தால் போதும் என சிலர் நினைக்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.

வண்டலூர் விலங்குகள் நலமுடன் உள்ளன

மேலும் பேசிய அவர், "விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று வந்ததாக எந்தவித ஆய்விலும் கண்டறியப்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டபோது, மனிதர்களுக்கு செலுத்தும் தடுப்பூசி அளவை அதிகரித்து செலுத்தினோம்.

அந்த விலங்குகள் தற்போது நலமுடன் உள்ளன. விலங்குகளுக்கு என தனியாக கரோனா தடுப்பூசி இல்லை. மற்ற விலங்குகளுக்கு கரோனா பரவியதற்கான ஆதாரம் இல்லை. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. பூனைகளுக்கு கரோனா வரலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் பகுப்பாய்வு நிலையில் தான் உள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பு

இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அக்டோபர் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை கால்நடை மருத்துவத்தில் 480 இடங்களும், பிடெக் படிப்பில் 100 இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டைவிட கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்தாண்டு 25-30 விழுக்காடு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.