ETV Bharat / state

குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவு ரத்து! - gurumoorthy petition

Madras High Court: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 7:12 AM IST

சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள் என்பது உள்ளிட்ட கருத்துகளை பேசினார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்துவிட்டார். பின்னர், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மீண்டும் விசாரணை நடைமுறையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து, குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, அவமதிப்பு வழக்கை தொடர அனுமதி வழங்கிய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "ஏ.ஆர்.ரஹ்மான் மன்னிப்பு கேட்க வேண்டும்" நஷ்ட ஈடு கோரி மருத்துவர்கள் சங்கம் தரப்பில் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.