ETV Bharat / state

மருத்துவர்கள், செவிலியருக்கு தரமான உணவு மற்றும் தங்குமிட வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியம் - ஈடிவி பாரத்

கரோனா பேரிடர் காலத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து மக்கள் சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தரமான உணவு மற்றும் பிரசித்திபெற்ற உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு ஆகியவை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

மருத்துவர்கள் செவிலியருக்கு தரமான உணவு மற்றும் தங்குமிட வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

author img

By

Published : Jun 10, 2021, 11:53 AM IST

சென்னை: கிண்டியில் சிறுதொழில் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் www.takecareinternational.org என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் காளி வெங்கட், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், 'கரோனா பேரிடரில் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை,

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனைகள், அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கிண்டி கிங் வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனை, ஈஎஸ்ஐ அயனாவரம், கீழ்ப்பாக்கம் மனநலமருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உயர் தர தங்கும் விடுதிகளில் தங்குமிடவசதியும், தரமான உணவும் வழங்கிட முதலமைச்சர் உத்தரவின்படி, மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கு உயர்தர தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் அவர்களைத் தங்க வைக்க வேண்டுமென்றும், சென்னையில் உள்ள தரம் மற்றும் பிரசித்திபெற்ற உணவகங்களிருந்து உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களிலிருந்து உணவுக்கென்று ரூ.600 முதல் ரூ.550 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 21-5-2021க்குப் பிறகு அடையாறு ஆனந்த பவன், நம்ம வீட்டு வசந்தபவன், சரவண பவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ உணவகங்களிலிருந்தும், வசந்த பவன்-குரு மெஸ், நந்தனாஸ் ஆகிய அசைவ உணவகங்களிலிருந்தும் தரம் உயர்ந்த புரதச்சத்து மிகுந்த சைவ மற்றும் அசைவ உணவுகள் ரூ.450க்கு சென்னையில் வழங்கப்படுகிறது.

அதுபோல் தமிழ்நாடு முழுவதும் ரூ.375, ரூ.350 என்று மாவட்டத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செவிலியர் தங்கும் வசதி கடந்த அதிமுக ஆட்சியில் சாதாரண விடுதியில் தங்குவதற்கு ரூ.900 என விலை இருந்தது.

இந்நிலையில் 21-5-2021-க்குப் பிறகு விஜய் பார்க், வெஸ்ட்டின் பார்க், சபரி இன், பிரியதர்ஷினி பார்க், சென்னை கேட்வே, அருணாச்சல ரெசிடன்சி போன்ற உயர்தர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால், அதற்குரிய ஒரு நாள் தொகை ரூ.900-த்திலிருந்து ரூ.750 என குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு கரோனா பேரிடரில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு ஆகும் செலவிலிருந்து எந்தவித இடையூறும்,
கையூட்டும் இல்லாமல் பயனாளர்கள் முழுமையான பயனை அடைய முடியும்.

அதேவேளையில் அதற்காக ஒதுக்கப்பட்டத் தொகை குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு அரசுக்கு ஏற்படும் செலவீனம் ஏறத்தாழ ரூபாய் 30 லட்சம் குறைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நடவடிக்கை ஆரம்பக் கட்டம்தான். கரோனா பேரிடர் முடிவுக்குவரும் நிலையில் இது குறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா? உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.