ETV Bharat / state

மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் - மாநகராட்சி அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Sep 15, 2020, 2:03 PM IST

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் மின்கசிவால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Chennai corporation
சென்னை மாநகராட்சி

சென்னை புளியந்தோப்பு (திரு.வி.க மண்டலம்) பெரியார் நகரை சேர்ந்த சேக் அப்துல் என்பவரின் மனைவி அலிமா(35). இவர் நாராயணசாமி தெருவில் சாஜிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.

இதையடுத்து வழக்கம்போல் நேற்று காலை (செப். 14) அவரது வீட்டுக்கு சென்றபோது, தெருவில் மழைநீர் தேங்கி இருந்த காரணத்தால் ஓரமான பகுதியில் நடந்து சென்றார்.

அவர் சென்ற பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு, அங்கு தேங்கியிருந்த நீரிலும், ஈரமான தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் நடந்து சென்ற அலிமா, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விதமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தன. கடந்த ஒரு வார காலமாக இந்த மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டும், எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தகுந்த விசாரணை மேற்கொண்டு முழு அறிக்கையை மண்டல அலுவலர் உடனடியாக மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் வெங்கட்டராமன் ஆகியோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் மொத்தம் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் தெருவிளக்குகள் ஏழு ஆயிரத்து 220 மின் பெட்டிகளும் உள்ளன.

இவற்றை பராமரிப்பதற்காக மாநகராட்சியின் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 700 நபர்கள் நாள்தோறும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 200 வார்டுகளிலும் எந்த ஒரு மின் கசிவு அல்லது பழுது ஏதும் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.