இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டிக்கும்விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுதொடர்பாக பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி, ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை மத்திய அரசு இந்தியாவிற்கு அழைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவையும் எதிரித்து ஐநா மன்றத்தில் நீதி கேட்கும் நேரத்தில் இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு வரவேற்றுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணை நியமாக நடந்திட இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை வெளியேற்றுவதற்கு அவரிடம் வலியுறுத்த வேண்டும்’ என்றார்.
இறுதியில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட 30க்கும் அதிகமான திராவிடர் விடுதலை கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகோ கடும்தாக்கு