திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள எடத்துனூர் மாந்தோப்பு என்ற ஏரி அப்பகுதிக்கு முக்கிய நீராதரமாக இருந்துவருகிறது.
இந்த ஏரியைத் தூர்வார அனுமதி பெற்ற ஸ்ரீராமசந்திர அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஏரியிலிருந்து அளவுக்கதிமாக சவுடு மணல் எடுத்து வணிக ரீதியில் செயல்படுவதால், ஏரி பாழடைந்து விவசாயம் செய்யமுடியவில்லை எனக் கூறி கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அமர்வு, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது.