ETV Bharat / state

சமூகநீதி கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை - முதலமைச்சர் ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: சமூகநீதி கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Sep 16, 2021, 12:49 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள் " “ திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக , சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள் . இந்த வரலாறு இன்று நேற்றல்ல ; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது ஆகும் .

1916 - ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி , தீண்டாமை ஒழிப்பு , ஒடுக்கப்பட்டோர் உரிமை , சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது . 1920 - ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது . அதில் மிகமிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது .

அதுதான் தமிழ்ச்சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும் . 16.9.1921 - ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . " அரசுப்பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் .

அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது . இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும் . அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது .

நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16 - ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர் , சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார் , டி.எம்.நாயர் , கடலூர் ஏ.சுப்பராயலு , பனகல் அரசர் , அமைச்சர் எஸ்.முத்தையா , பி.டி. இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன் , இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூகநீதிப் புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் இலட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது .

இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா அவர்கள் , அதனால் தான் , இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள் ' என்றார் தந்தை பெரியார்.

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது . இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன் . திராவிட முன்னேற்றக் கழக அரசானது , இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது .

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது . ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம் . கல்வி , வேலைவாய்ப்பு , பதவிகள் , பதவி உயர்வுகள் , நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக , முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும் ; வழிகாட்டும் , செயல்படுத்தும் .

சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும் . இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் . இதில் அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் . சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன் எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம்” என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.