காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரம் வருகிறார்.
டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்வார்.
அதன்பின், சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை இரவு தங்குகிறார். சனிக்கிழமை காலை திருமலை வெங்கடாஜலபதி தரிசனத்திற்காக, ஆந்திரா செல்கிறார்.
இந்த நிகழ்வையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.