சென்னை: நிலவின் தென் துருவத்தை அடைந்து வரலாற்று சாதனையை படைத்து உள்ள இந்தியா, மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஒரு சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது. விக்ரம் லேண்டரின் ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறங்கி ஆய்வைத் தொடங்கி உள்ள இந்த நேரத்தில், அஜர்பைஜானில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட கடும் முயற்சியில் இறங்கி உள்ளார், தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவருமான மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதிய முதல் இரண்டு சுற்றும் டிராவில் முடிந்தன. ஃபிடே உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாளில் வெள்ளை நிறக் காய்கள் உடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா, 35வது நகர்வில் ஆட்டத்தை டிரா செய்தார்.
-
Praggnanandhaa: "Tomorrow, I just want to come with a fresh mind. I will try to rest today; it is very important because I've been playing a lot of tiebreaks here. I know it can take a lot of games or short ones as well, so I have to be ready for everything." #FIDEWorldCup pic.twitter.com/xi4yRJ2LxR
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Praggnanandhaa: "Tomorrow, I just want to come with a fresh mind. I will try to rest today; it is very important because I've been playing a lot of tiebreaks here. I know it can take a lot of games or short ones as well, so I have to be ready for everything." #FIDEWorldCup pic.twitter.com/xi4yRJ2LxR
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023Praggnanandhaa: "Tomorrow, I just want to come with a fresh mind. I will try to rest today; it is very important because I've been playing a lot of tiebreaks here. I know it can take a lot of games or short ones as well, so I have to be ready for everything." #FIDEWorldCup pic.twitter.com/xi4yRJ2LxR
— International Chess Federation (@FIDE_chess) August 23, 2023
இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட். 23) நடைபெற்ற இரண்டாவது சுற்றில் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்கள் உடன் விளையாடி ஆட்டத்தை டிரா செய்தார். இதனால், இன்று (ஆகஸ்ட். 24) டைபிரேக்கர் முறையில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதனை இந்தியாவே உற்றுநோக்கும் நேரத்தில், பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷின் நேரத்தை ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள் நாடின.
இதன் பலனாக இன்றைய ஆட்டம் குறித்து பேசிய இந்திய கிராண்ட் மாஸ்டரின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ், "நேற்றைய ஆட்டம் என்பது சிறப்பான ஆட்டம். இருவரும் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தனர். என்னுடைய பார்வையில், எளிதாக நேற்றைய ஆட்டத்தை மேக்ன்ஸ் கார்ல்சன் ட்ராவில் கொண்டு வந்து விட்டார்.
இன்றைய ஆட்டம் மிகவும் நல்ல விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெறும். மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளார். அதனால் அவரை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தாவின் செயல்பாடு இதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது வருகிறது. மேலும், கார்ல்சனின் திட்ட வகுப்பு எப்படி என்று இன்றைய ஆட்டத்தில்தான் தெரியும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தின் முடிவில் பேசிய பிரக்ஞானந்தா, "இவ்வளவு விரைவாக கார்ல்சென் டிரா செய்வார் என்று தான் நினைக்கவில்லை என்றும், அவர் டிரா செய்யும் நோக்கத்துடனேயே விளையாடினார் என்றும் கூறினார். அது மட்டுமல்லாமல், நாளைய தினம் வெற்றிக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பிறகே ஓய்வு எடுப்பேன்" என்று தெரிவித்து இருந்தார்.
அதேபோல் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற கார்ல்சன், "பிரக்ஞானந்தா ஏற்கனவே பலமிக்க வீரர்களுடன் பல டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாடியதாகவும், அவர் மிகவும் வலுவான எதிராளி என்பதை தான் அறிவதாகவும் தெரிவித்தார். உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட கார்ல்சன், நல்ல உடல் தகுதியுடன் சாதகமான நாளாக அமைந்தால் தனக்கு வெற்றி வாய்ப்பு உண்டு என கூறிமார். மேலும், தனக்கு ஒய்வு பெற அதிகமாக ஒரு நாள் கிடைத்துள்ளதால் நல்ல உடல் தகுதியுடன் திரும்புவேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார்? டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதல்!