ETV Bharat / state

தேர்தல் பணியிலுள்ள காவலர்கள் வாக்களிக்க தபால் வாக்குப்பதிவு!

சென்னை காவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் முறை குறித்து சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பணியிலுள்ள காவலர்கள் வாக்களிக்க தபால் வாக்குப்பதிவு தபால் வாக்குபதிவு ஏற்பாடு

author img

By

Published : Feb 5, 2022, 12:14 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் பணியில் இருக்கக்கூடிய காவலர்களால் வாக்குகள் செலுத்த முடியாத நிலை ஏற்படும், இதற்காக தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் வாக்கு குறித்த சுற்றறிக்கை ஒன்றை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுப்பி உள்ளார். சென்னை மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட படிவம் 15 பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப்படிவம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் அனுப்பப்பட்டது.

இந்த விண்ணப்பப் படிவம் சம்பந்தப்பட்ட காவல் துறையின் மாவட்ட துணை ஆணையர் அலுவலகம் மற்றும் சிறப்பு பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த படிவத்தை சம்பந்தப்பட்ட காவலர்களிடம் வழங்கி அதை சரிபார்த்து பின்பு பூர்த்தி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

7ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்

மாநில தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் அழுத்தி உள்நுழைந்து அதிலுள்ள விபரங்களை, படிவம் 15 உள்ள பூர்த்தி செய்யப்படாத இடத்தில் உள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து அதனை நகல் எடுத்து அதனுடன் வாக்காளர் அடையாள அட்டையின் நகலையும் படிவம் 15 உடன் இணைத்து தேர்தல் பிரிவில் வருகிற 5ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வருகிற 7ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை காவல் ஆணையர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தபால் வாக்கு பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியல் சென்னை பகுதியை விட்டு மற்ற மாவட்டங்களில் இருக்கும்பட்சத்தில் படிவம் 15 இல் தற்போதைய இருப்பிட முகவரியை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தற்போது உள்ள முகவரிக்கு தபால் வாக்கு சீட்டு வர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறிவுரைகளைத் தெரிந்துகொண்டு உங்கள் வாக்குகளை செலுத்தி அதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் இதனை வருகிற 11ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அனைத்து காவலர்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாக சென்றடைய தேர்தல் பிரிவு மற்றும் நோடல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.