ETV Bharat / state

தனுஷ், எஸ்.கே, விஜய் சேதுபதி வெல்லப் போவது யார்? - பொங்கல் ரேஸில் மோதும் படங்கள் ஒரு பார்வை! - மெரி கிறிஸ்துமஸ்

Pongal Release New Tamil Movies: தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தீனி போடும் வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு போட்டிப் போட்டு வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

pongal release movies list
பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 3:11 PM IST

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரைப் பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. தனது ஆதர்ச நாயகன் படத்தை நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடினால் தான், அந்த பண்டிகையே நிறைவு பெறும். அப்படி ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களது படங்கள் பண்டிகை நாட்களில் வெளியானால், அவர்களது ரசிகர்களைக் கையிலேயே பிடிக்க முடியாது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகாதது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்களின் படங்கள் இந்த பொங்கலுக்கு மோதுகின்றன.

கேப்டன் மில்லர்: தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என்று அழைக்கப்படும் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வாத்தி திரைப்படம் வெளியானது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அருண் மாதேஸ்வரன் படங்கள் என்றாலே மேக்கிங் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீரியட் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி கேப்டன் மில்லர் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம், லியோ படங்களைத் தொடர்ந்து ஐமேக்ஸில் வெளியாகும் நான்காவது தமிழ் படம் கேப்டன் மில்லர். உலகில் 2000க்கும் குறைவான ஐமேக்ஸ் திரையரங்குகள் தான் உள்ளது. தனுஷின் திரை வாழ்வில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

அயலான்: இன்று நேற்று நாளை என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். வேற்று கிரக வாசியை மையமாகக் கொண்ட அறிவியல் படமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ரகுல் பீர்த்தி சிங் நாயகியாக நடித்துள்ளார்.‌ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சிஜி பணிகள் முடியாததால், இந்த ஆண்டு பொங்கலுக்குக் களம் இறங்குகிறது. படத்தின் ட்ரெய்லரில் சிஜி சிறப்பாக இருந்ததைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக அயலான் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மிஷன்: அருண் விஜய், நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் மிஷன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படமும், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

மிஷன் திரைப்படம் நடிகர் அருண் விஜய்க்கு முதல் பண்டிகை ரிலீஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ட்ரெய்லர் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால், சைலண்ட் வின்னர் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்: பகல்பூர், அந்தாதுன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படமும் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இது காதல் படமா? இல்லை த்ரில்லர் படமா? என்று தெரியாத அளவுக்கு, இப்படத்தின் ட்ரெய்லர் இருந்தது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ஹனுமான் என்ற படமும் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

ஃபேண்டஸி படமான இதில் நடிகர் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், வினய், அமிர்தா ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் எந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடிக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..

இதையும் படிங்க: சிக்ஸு சிக்ஸு.. கிரிக்கெட் களத்தில் அலப்பறை செய்யும் விஜய்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.