புதுச்சேரி: ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஜன. 13) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
முன்னதாக ஆளுநர் மாளிகையில் பொங்கலிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

அப்போது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் ரங்கசாமி, எம்.பி.செல்வகணபதி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு கட்டாயம் தேவை: வானதி சீனிவாசன்