ETV Bharat / state

இலங்கையை ஆண்ட ராஜராஜ சோழன் ! - ஆய்வு நடத்த பொன்.மாணிக்கவேல் கோரிக்கை - பொன் மாணிக்கவேல்

சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்டதற்கான கல்வெட்டுகள் அமைந்துள்ள 1009 வருட பழமையான கோயிலில் ஆராய்ச்சி நடத்த கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்

சோழர்கள் கட்டிய உத்தம சோளீஸ்வரன் கோயிலில் ஆராய்ச்சி நடத்த கோரி பொன் மாணிக்கவேல் அரசுக்கு கடிதம்

author img

By

Published : Jul 13, 2022, 12:11 PM IST

Updated : Jul 13, 2022, 12:46 PM IST

இலங்கையை 78 வருடத்துக்கு மேலாக சோழ மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு அடையாளமாக 1009 வருட பழமையான உத்தம சோழீஸ்வரம் உடைய மகாதேவர் கோயிலில் ஆராய்ச்சி நடத்த கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை நாட்டில் கல்பேட்கொரேளே என்ற நகரத்தின் அருகே அமைந்துள்ளது எடகடேய் கிராமம். இந்த கிராமத்தில் ராஜராஜ சோழன் 1009 வருடத்திற்ககு முன்பு கட்டிய உத்தம சோழீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் கேட்பாரற்று கிடப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த 1912 ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்துவ கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலை கண்டுபிடித்து அது குறித்த தகவல் அனைத்தையும் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தெரிவிக்காமல் சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று பொக்கிஷம் நிறைந்த இந்த தகவல் எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்திய தொல்லியல் துறை மற்றும் கலாச்சாரத்துறை உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் ராஜராஜ சோழன் கட்டிய மகாதேவர் கோயிலில் மிகப்பெரிய கருங்கல் தூண் ஒன்று உள்ளது.இந்த கல் தூணில் தமிழில் பழமையான வட்ட எழுத்துக்களில், ராஜராஜ சோழன் 78 ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்தார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இலங்கை நாட்டின் அப்போதைய பெயர் சிம்ஹாலா என்று இருந்ததை மாற்றிவிட்டு, அந்த நாட்டிற்கு நிகரி சோழமண்டலம் என பெயரிட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் சிம்ஹாலாவின் தலைநகரமான அனுராதபுரத்தை எரித்து தீக்கரையாக்கி விட்டு ஜனநாதமங்கலம் என்ற புதிய தலைநகரத்தை ராஜராஜ சோழன் நிறுவியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோழீஸ்வர உடைய மகாதேவர் சிவன் கோயிலில் உள்ள கருங்கல் தூண் இருந்து வருவதாக பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தகவல் குறித்து இந்திய தொல்லியல் துறைக்கும் கலாச்சார அமைச்சகத்துக்கும் இதுவரை தகவல் தெரியவில்லை எனவும், வெளிநாட்டில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இதை கண்டுபிடித்துள்ளதாகவும் பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மத்திய கலாச்சார துறை அமைச்சர் கிஷண் ரெட்டிக்கும் இலங்கை நாட்டுடன் கலந்து பேசி 1009 வருடம் பழமையான கோயிலில் ஆராய்ச்சி நடத்த கோரி கடிதம் எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை!

Last Updated : Jul 13, 2022, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.