ETV Bharat / state

புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது - காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை - காவல்துறை

தங்கள் பிரச்சினைகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்

உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது

author img

By

Published : Sep 10, 2022, 3:59 PM IST

சென்னை: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுரை கூறி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லும்போது சம்மந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சில காவல் துறையினர் அதிகாரத்தில் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாகவும் டிஜிபி கருத்து தெரிவித்துள்ளார். இந்த எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழ்நிலையும் இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே ஒரு அதிகாரியால் தங்கள் இலக்குகளை தொழிலிலும், வாழ்க்கையிலும் அடைய முடியும் என தெரிவித்துள்ள டிஜிபி, எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானதல்ல எனவும் மக்களுக்கான சேவையாற்றவே அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு காவல்துறையினரும் இறுதி அதிகாரம் படைத்தவர் இல்லை என்பதை உணர்ந்து, தவறு செய்தால் கேள்வி கேட்க தங்களுக்கு மேல் உயர் அதிகாரிகள், நீதிமன்றம், ஆணையம் போன்றவைகள் உள்ளதை அறிந்து நடக்க வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் இதுபோன்ற எதிர்மறை அணுகுமுறைகளை கைவிட்டு, அதற்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு செவி சாய்த்து தங்களால் முடிந்தவரை தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

புகார் கொடுக்க வருபவர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது

மேலும் தங்கள் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்குவதும் போன்ற நேர்மறை மனப்பாண்மையை வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல உயர் அதிகாரிகளும் தங்கள் கீழ் பணியாற்றும் காவல் துறையினருக்கு நேர்மறை அணுகுமுறை குறித்த பயிற்சிகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது

மேலும் இனிவரும் காலங்களில் அனைத்து காவல்துறையினரும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எதிர்மறை அணுகுமுறையை கைவிடுத்து நேர்மறையான அணுகுமுறையுடன் பழகுவதை வாடிக்கையாக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை வாயிலாக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.