ETV Bharat / state

கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல் துறை - மக்களிடையே பரபரப்பு! - கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி

சென்னை: துணைக் காவல் ஆய்வாளர் மகளின் திருமண நிகழ்ச்சியில் நகை, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களின் சிசிடிவி காட்சியை வெளியிட்டு, காவல்துறை தற்போது பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாக மாறியுள்ளது.

police-seek-public-help-to-catch-robbers

author img

By

Published : Mar 11, 2020, 10:08 PM IST

சென்னை பாடி புது நகரைச் சேர்ந்தவர் தங்கசுவாமி (57), கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் போல் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், மணமகள் அறையிலிருந்த 40 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவந்துள்ளனர்.

இரண்டு மாதங்கள் ஆகியும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்காமல் காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருவதால், தற்போது காவல்துறையே சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் உதவியை நாடியுள்ளது. மேலும் கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியும் பட்சத்தில், உடனடியாக பூந்தமல்லி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கும் படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

இரண்டு மாதங்களாக காவல்துறையினருக்கு கண்ணாமூச்சி காட்டிவரும் கொள்ளையர்களைப் பிடிக்க, காவல்துறை தற்போது பொதுமக்களை நாடியுள்ள சம்பவம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடிபோதையில் தலைமைக் காவலரைத் தாக்கிய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.