ETV Bharat / state

வெடிகுண்டு குறித்து சர்ச்சை பேச்சு.. முன்னாள் ராணுவ அதிகாரி மீது வழக்கு! - Chennai Latest News

தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் விதமாக பேசிய பாஜக தேசிய பொது குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான கர்னல் பாண்டியன் 2 பிரிவுகளில் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'எங்களிக்கு குண்டு வைக்கத் தெரியும்-அரசுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி மிரட்டல்'!

author img

By

Published : Feb 22, 2023, 4:51 PM IST

சென்னை: ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடந்த விவகாரம் தொடர்பாகவும் சென்னையில் நேற்று தமிழ்நாடு பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் அனுமதியை மீறி பேரணி நடத்திய காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் அந்தப் போராட்டத்தின் போது மேடையில் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான கர்னல் பாண்டியன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். குறிப்பாக இராணுவ வீரர்களுக்குத் துப்பாக்கிச் சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும் எனக் கூறி, தமிழ்நாட்டில் வைக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் எனத் தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் விதமாக பேசினார்.

மேடையில் இவ்வாறாக பேசியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி போலீசார் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியது என இரண்டு பிரிவுகளில் கர்னல் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், முகமது கவுஸ் என்பவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய முன்னாள் ராணுவ அதிகாரியும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கர்ணல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Video: தெருநாய்கள் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.