ETV Bharat / state

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; சிறையில் முதல் வகுப்பு கோரிய யுவராஜ்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - நீதிபதி சுந்தர் மோகன்

Gokulraj Murder Case: கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் மாவீரர் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்-க்கு முதல் வகுப்பு வசதி வழங்குவது குறித்து கோவை சிறை நிர்வாகமே முடிவெடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court
Chennai High Court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 6:42 PM IST

சென்னை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்கக் கோரி, அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் யுவராஜ் அரசியல் கட்சியை நடத்தியது, தான் சார்ந்துள்ள சமுதாய மக்களுக்கு செய்த சேவை, சமூக அந்தஸ்து, கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறைத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் ஆஜராகி, யுவராஜ் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளதால், முதல் வகுப்பு வசதி போன்ற சலுகைகள் வழங்க முடியாது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த யுவராஜின் மனைவி தரப்பு வழக்கறிஞர் காசிராஜன், ஆணவக் கொலை வழக்காக இருந்தாலும் கூட, சிறைத்துறை விதிகளின்படி முதல் நிலை சிறைவாசியாக கருத வேண்டிய அனைத்து தகுதிகளும் யுவராஜுக்கு உள்ளதால், அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், யுவராஜ்-க்கு முதல் வகுப்பு சிறை வழங்குவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், கோவை மத்திய சிறை நிர்வாகம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: வைகை அணையில் இருந்து விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.