ETV Bharat / state

"போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உடனே வழங்குக" - மருத்துவர் ராமதாஸ் வலிறுத்தல் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

che
che
author img

By

Published : Mar 14, 2023, 3:33 PM IST

சென்னை: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (மார்ச்.14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு 2015ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மீது ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியுள்ளது.

அகவிலைப்படி உயர்த்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், நெருக்கடிகளும் காலவரையின்றி தொடர்வதை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டு 88 மாதங்கள், அதாவது 7 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. இந்த 88 மாதங்களில் அவர்களின் வாழ்வாதாரச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த சூழலில் அகவிலைப்படியை உயர்த்தாமல் ஓய்வூதியர்களால் கூடுதல் செலவை எவ்வாறு சமாளிக்க முடியும்? - போக்குவரத்து ஊழியர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல, அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு மறுக்கக்கூடாது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறி அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது. அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதற்காக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே தமிழ்நாடு அரசு அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி, நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும். மேலும் இதுகுறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் அரசு வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு.. காரணம் என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.