அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.
எனது பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு நாடுகளின் உறவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை குறித்து ஆலோசிப்பேன். பிராந்திய மற்றும் உலகளாவிய பரஸ்பர நலன் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வோம். அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரீஸை சந்தித்து பேச உள்ளேன்.
முக்கிய நிகழ்வுகள்
முதல் முறையாக நேரடியாக நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா ஆகியோருடன் நான் கலந்து கொள்கிறேன்.
மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்ற உச்சிமாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான பகிரப்பட்ட தகவல் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசப்படும்.
மேலும் இந்த நாட்டின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுபடுத்துவது குறித்து ஆலோசிப்பேன். ஐநா பொது சபையில் ஆற்றும் உரையுடன் எனது பயணத்தை நிறைவு செய்வேன். கோவிட் 19 பெருந்தொற்று, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து பேசப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'முந்திரி ஆலை தொழிலாளர் மரணம்; நீதி பெற்றுத் தருவது எப்போது?'