ETV Bharat / state

கைகளை இழந்த பார்வையற்றவர்: கண்டுகொள்ளாத காவல்துறை! - PhysicallyChallenged

சென்னை: மாநகரப் பேருந்து மோதி கைகள் முறிந்த நிலையில் பார்வையற்றவர், உதவித்தொகை பெற்றுத்தரக் கோரி காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கைகளை இழந்த பார்வையற்றவர்: கண்டுகொள்ளாத காவல்துறை!
author img

By

Published : May 7, 2019, 5:29 PM IST

சென்னை டிபி சத்திரம் பகுதியில் வசிப்பவர் அந்தோணி(50). இவருக்கு சிறுவயதிலேயே பார்வை கிடையாது. இதனால் வேறு எந்த தொழிலும் செய்யமுடியாமல் தவித்து வந்த இவர், பேருந்து நிலையம் சென்று பாட்டுப் பாடி அதன் மூலம் ஈட்டப்படும் வருவாயைக் கொண்டு வாழ்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். ஜெபக்கூட்டத்தை முடித்துவிட்டு தேவாலயத்தை விட்டு வெளியே வந்த போது அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது. மாநகரப் பேருந்து இவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அந்தோணி பரிதாபமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கை முறிந்து பெரும் சேதம் ஏற்பட்டதால், உடனே அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கைகளை இழந்த பார்வையற்றவர்: கண்ணீரோடு அவரின் சகோதரி!

இது தொடர்பாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் எப்ஐஆர் கூட போடவில்லை என்று அந்தோணியின் தங்கை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் பல சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதும், காவல் துறையினர் கேமராக்கள் இல்லை என பொய் கூறுகின்றனர் என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

மேலும் விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநரை கைது செய்து, அறுவைச் சிகிச்சை செய்வதற்காக உதவித்தொகை பெற்றுத்தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

மாநகர பேருந்து மோதியதில் கை முறிந்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பார்வையற்றோர் காவல் ஆணையரிடம் புகார்..

சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி வயது (50).இவர் சிறுவயதிலிருந்தே பார்வையை இழந்தவர் என தெரிகிறது.

இவர் பேருந்து நிலையம் சென்று பாட்டு பாடும் தொழில் செய்து வந்துள்ளார்.. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்துக்கு அந்தோணி சென்றுள்ளார்.

பின்னர் ஜெபக்கூட்டத்தை  முடித்துவிட்டு வெளியே வரும் போது மாநகர பேருந்து ஒன்று மோதிவிட்டு சென்றுள்ளது.இதில் படுகாயமடைந்த அந்தோணிக்கு கை முறிந்து நிலையில் போலிசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்

மேலும் மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை அளிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.. ஆனால் எந்த ஒரு சிகிச்சையும் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக  அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எப்ஐஆர் கூட போடவில்லை என தெரிகிறது.

பின்பு விபத்து நடந்த இடத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராக்களும் இல்லை என பொய் கூறுவதாக அந்தோனியின் தங்கை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் உடனடியாக  விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுனரை கைது செய்து அறுவை சிகிச்சை அளிக்க உதவித்தொகையை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

பேட்டி :மேரி (அந்தோணிியின் சகோதரி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.