சென்னை: கரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 20) முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தொலை தூர பயணம் செய்யும் பேருந்துகள் இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பகலில் பேருந்துகளை இயக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (ஏப்ரல் 20) தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். குஜராத் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் போல தனியார் பேருந்துகளை இரவு நேரத்தில் ் இயக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அடுத்தடுத்த பொது முடக்கத்தால் தங்களது தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், தற்போது காபந்து அரசு உள்ளதால் தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைந்த பின்னர் வரிச்சலுகை குறித்து உத்தரவாதத்தை அளிக்க முடியும் என உள்துறை செயலாளர் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என வழக்கு: மும்பை பங்குச் சந்தை பதிலளிக்க உத்தரவு