ETV Bharat / state

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை! - இளநிலை உதவியாளர் பணி

தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் நிரந்தர பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

permanent
permanent
author img

By

Published : Feb 3, 2023, 1:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செவிலியர்கள், இருட்டறை உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று(பிப்.2) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 15,409 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த செவிலியர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடித்த பின்னர், நிரந்தர காலிப் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி தற்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 570 செவிலியர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

177 இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள் என 177 இருட்டறை உதவியாளர்கள் நிரந்தர பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் ஸ்டாலின் 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்

உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

21 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எருதுவிடும் விழாவுக்கு தடையில்லை - காவல்துறை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.