ETV Bharat / state

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

தற்கொலை வாய்ப்பை தடுக்கும் வகையில், அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை
author img

By

Published : Mar 11, 2023, 6:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பயிர்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் விதமாக, விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை பயிர்கள் மீது தெளிக்கின்றனர். இதில் 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாக அடையாளம் காணப்பட்டது.

அதுமட்டுமின்றி, பலர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்தன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் கடும் விதிமுறைகளை வகுக்க ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியது. இந்தியாவில் 2015ம் ஆண்டு மட்டும் 1,34,000 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், இதில் 24,000 பேரின் மரணத்துக்கு பூச்சிக் கொல்லி மருந்துகளே காரணம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் இம்மருந்துகளை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மோனோகுரோட்டோபாஸ் ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டில் தேசிய அளவில் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 7.17% ஆக அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், இதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவு பயன்படுத்தப்படுள்ளதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்கொலை வாய்ப்பை தடுக்கும் வகையில், அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டுக்கு, தமிழ்நாடு அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.

ஏற்கனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உட்பொருளை கொண்ட எலி மருந்து நிரந்தரமாக தடுக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தடை விதிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த மருந்து பொருள்களை வாகனத்தில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திட்டமிட்ட கொலைகள் அதிகரிப்பு - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.