சென்னை பம்மல் அடுத்து நேரு நகர் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் சுற்றித்திரியும் வெறி நாய் ஒன்று, அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் ஐந்திற்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெறி நாய் புகுந்து விடுவதால் அதனை விரட்ட முயலும்போது கடிக்க வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். நாயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பம்மல் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கினை கடைப்பிடித்து வருவதாகவும், இனியும் நாயினை பிடிக்க நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தவறினால் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.