தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 217 பேர் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், கரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா பாதித்த சென்னையைச் சேர்ந்த நான்கு நபர்களும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.