சென்னை: Curfew - தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக்கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதையடுத்து, கடந்த வாரம் அரசுத்துறை உயர் அலுவலர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதிமுதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
அதன்படி, தமிழ்நாட்டில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.09) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இன்று விமானம், ரயில் சேவை மட்டும் இருக்கிறது.
இந்த இடங்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது.
ஆனால், வெளி மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டப் பயணிகள் வாடகை ஆட்டோ, வாடகை கார்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.