சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து சீரடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் நேற்று (ஜன.3) பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படவிருந்தது.
அதில் 95 பயணிகள் பயணிக்கவிருந்தனா். இந்நிலையில் சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக மாலை 4 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வானிலை இன்னும் சீராகாத காரணத்தால் சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிா்ச்சியடைந்தனர்.
சீரடி செல்லும் பயணிகள் அனைவரும் ரூ.600 கட்டணம் செலுத்தி, 48 நேரத்திற்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருந்தனா். அதில் பலருக்கு மீண்டும் அதே சான்றிதழை வைத்துக்கொண்டு மறுநாள் (ஜன.4) விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆகையால் பயணிகள் தங்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கால நீட்டிப்பு செய்து தரவேண்டும் எனக் கோரினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் சிலா் மும்பை வழியாக சீரடி சென்றனர். இதே விமானம் மீண்டும் சீரடி - சென்னை பயணிக்கவிருந்தது.
அதில் சீரடி - சென்னை வர விமானநிலையத்தில் காத்திருந்த 156 பயணிகள் விமான ரத்து அறிவிப்பால் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு