ETV Bharat / state

பாமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் - ஜி.கே மணி

திருவள்ளூர்: அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வெற்றிக்கு ராணுவ வீரர்கள் போல் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

ஜிகே மணி
author img

By

Published : Mar 30, 2019, 10:36 PM IST

திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட பாமக மாநில தலைவர் ஜிகே மணி கூறியதாவது,

அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும், இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆனால் இதை சகிக்க கொள்ள முடியாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூடடணிக் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

கூட்டணிக் கட்சியினர் போர்க்களத்தில் வீரர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகின்றனரோ அதுபோல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:அரக்கோணம் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் இயக்கிய மூர்த்தி போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை குறித்து கலந்தாய்வு கூட்டம் திருத்தணியில் நடந்தது.

Body:அரக்கோணம் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை குறித்து கலந்தாய்வு கூட்டம் திருத்தணியில் நடந்தது. இக்கூட்டணியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமை வகித்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இதில் பாமக கட்சியின் மாநிலத் தலைவர் ஜிகே மணி பங்கேற்று பேசியதாவது: அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும் லோக்சபா தொகுதிகளில் 40க்கு 40 தொகுதிகளிலும் சட்டசபை இடைத்தேர்தலில் 18 இடங்களிலும் கூட்டணி அமோக வெற்றி பெறும் இதை சகிக்க முடியாமல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார் ஸ்டாலின் பேச்சால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலையுள்ளது. பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினர் போர்க்களத்தில் வீரர்கள் எப்படி சுறுசுறுப்பாக செயல்படுகின்றனரோ அதுபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் இந்திய நாட்டை வலிமையாக உருவாக்க மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் அவர்தான் மீண்டும் பிரதமராக வருவார் என்பதை உறுதி பாமக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டினால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் பேசினார் இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.