ETV Bharat / state

9-ஆவது நாளாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்..! - பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Part time school teachers Hunger strike in chennai: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 9-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தினர், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.

Part time teachers hunger strike on 9th day demanding job permanency
பணி நிரந்தரம் கோரி 9-ஆவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:36 PM IST

பணி நிரந்தரம் கோரி 9-ஆவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஒவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012 ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மீண்டும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இன்று (அக்.3) 9-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 16459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். 12 ஆண்டாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும் பணிநிரந்தரப்படுத்தபடாமல் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பிஎப், இஎஸ்ஐ போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அதுவும் இதுவரையில் வழங்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி முதல் 9-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என பாட்டு பாடி கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “விண்வெளித்துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சமம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.