ETV Bharat / state

ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

tn assembly
tn assembly
author img

By

Published : Apr 13, 2023, 9:59 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வனத்துறை மீதான மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர், ’’திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் ரூ.15 கோடியில் கடற் பசு பாதுகாப்பு மையம், ரூ.20 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரூ.9.30 கோடி செலவில், ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்" என்றார்.

'காடு செழித்தால் நாடு செழிக்கும்', 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்', 'நெகிழியை தவிர்ப்போம் வனங்களை மீட்போம்', 'பறவைகள் சிறந்தால் மனிதனும் சிறக்கலாம்', 'யானைகள் வாழ்ந்தால் காடுகளும் வாழும்', 'புலி உள்ள காடே வளமான காடு', 'நீர்நிலைகள் காப்போம் பல்லுயிர் பெருக்குவோம்' உள்ளிட்ட வாசகங்கள் வனத்துறையின் புதிய அறிவிப்பு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: உதயநிதி வளர வேண்டியவர் என சொன்ன வானதி; அமித் ஷா பெயரை அவைக்குறிப்பில் நீக்கக்கோரிய நயினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.