சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (டிச.8) இரவு முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று (டிச.9) நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெறும் பல்லாவரம் வாரச்சந்தை மாண்டஸ் புயல் எதிரொலியால் இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டோன்மென்ட் நிர்வாகம் நேற்று மாலை இந்த அறிவிப்பை அறிவிக்காததால், இன்று காலை சிலர் பல்லாவரம் வாரச்சந்தையில் கடை வைக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பல்லாவரம் வாரச்சந்தை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி