அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 வயதாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவு ஒருமனதாக ஏற்கப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும், 59லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு இன்று (மே.4) அரசாணை வெளியிட்டுள்ளது.
வரும் மே 31ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விஜயகாந்த் - உதயநிதி சந்திப்பு: உறவை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு