ETV Bharat / state

கோடநாடு வழக்கில் தாமதம் ஏன்? ஓபிஎஸ் தரப்பினர் கேள்வி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போராட்டத்தில், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டம்
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 1, 2023, 4:42 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் இணைந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். முதல்முறையாக ஓபிஎஸ் அணியும் அமமுகவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, ஓபிஎஸ் அணியின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? இந்த கொள்ளை நடைபெறும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் துண்டிக்கப்படாத மின்சாரம் கொள்ளை சம்பவம் நடைபெறும் போது துண்டிக்கப்பட்டது எப்படி?" என்ற கேள்விகளை எழுப்பினார்.

மேலும் இச்சம்பவத்திற்கு அப்போதைய மின்சார துறை அமைச்சராக இருந்த தங்கமணி பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறும் பொழுது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார்.

இதையும் படிங்க: மணிப்பூர் வன்முறை:முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்; என்ன இருந்தது அந்த கடிதத்தில்!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுகவிற்கும் ஏதோ ஒரு வகையில் புரிதல் இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஈடுபட போவதாக அறிவித்தார்.

இதனிடையே சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் ஓபிஎஸ் அணியின் ஆதாரவாளரான ஜே.சி.டி பிரபாகர் தலைமையிலும் கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓபிஎஸ் அதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும், அதிமுக தலைமைக்கான போராட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த ஓபிஎஸ் தலைமையிலான அணி, அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்வதற்காக தான் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து நடத்துகிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு அழுத்தத்தால் திருநாகேஸ்வரம் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைப்பு - தாமரைச்செல்வன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.