சென்னை: தமிழ்கத்தின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று வெள்யிட்டுள்ளார். அதில், "பூரண மதுவிலக்கு என தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடைக்கு மேடை முழங்கிய திமுக. இன்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, மது விற்பனையை அதிகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதன் காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த நிலையில், மதுக் குடித்ததை தட்டிக் கேட்டதால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதனை செந்தில்குமார் தட்டிக் கேட்டதன் காரணமாக, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளதாகவும், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த செந்தில்குமாரின் உறவினர்களையும் அந்தக் கும்பல் வெட்டி கொன்றுள்ளது.
மேலும், அந்த இடமே ரத்த ஆறுபோல் காட்சி அளிப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்தக் கொடூரச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறிவைக் கெடுத்து, அமைதியைக் குலைத்து தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் அளவற்ற தீமைகள் ஏற்படுத்தும் மதுவை ஒழிப்பதில் நாட்டு மக்களும், அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டிலோ அரசே மதுவை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
இதன்மூலம், சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது. மக்களின் அன்றாட பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல், எதற்குமே உதவாத 'இந்தியா கூட்டணி' குறித்து நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்" என குற்றம் சாட்டி இருந்தார்.
-
மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்! pic.twitter.com/GKWioUfUIO
— O Panneerselvam (@OfficeOfOPS) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்! pic.twitter.com/GKWioUfUIO
— O Panneerselvam (@OfficeOfOPS) September 5, 2023மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்! pic.twitter.com/GKWioUfUIO
— O Panneerselvam (@OfficeOfOPS) September 5, 2023
மேலும், "இதனைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூர கொலைச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கும் வகையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தரவும், மது விலக்கை படிப்படியாகவாது நடைமுறைப்படுத்தவும், துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு புது உத்தரவு!