ETV Bharat / state

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு நவ.15-இல் விசாரணை! - அதிமுக கொடி சின்னம் பயன்படுத்த தடை

Madras High Court: அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதித்ததை எதிர்த்த மனு மீது வருகிற புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 12:06 PM IST

Updated : Nov 10, 2023, 12:28 PM IST

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வதுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த நவம்பர் 6ஆம் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நேற்றைய முன்தினம் (நவ.8) அன்று ஓபிஎஸ் சார்பில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுத் தாக்கல் நடைமுறை முடிந்தால் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால், மனு இன்று பட்டியலிடப்படாத நிலையில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தார். அதனால், இன்றே வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

முறையீடு செய்யப்பட்ட அன்றே மனுத் தாக்கல் செய்யாத நிலையில் எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் புதன்கிழமை (நவ 15) விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Nov 10, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.