ETV Bharat / state

Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜி கைது - கண்டனம் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் - திமுக

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரம், அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

tweet
ஆம் ஆத்மி கட்சி
author img

By

Published : Jun 14, 2023, 4:16 PM IST

டெல்லி: நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை பசுமை சாலையில் உள்ள அரசு வீட்டில் சோதனை நடத்தி வந்தனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் (ED) கைது செய்யப்பட்டார்.

இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.மல்லிகார்ஜுன கார்கே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பயப்படாது என்றும் மோடி தலைமையிலான அரசாங்கம் எதிர்கட்சிகளை துன்புறுத்தல் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளது. எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம் என்று கார்கே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சவுகதா ராய் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது ‘முற்றிலும் தவறு’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆம் ஆத்மி கட்சி அமலாக்கத்துறையை தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நள்ளிரவில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். உடல்நிலை சரியில்லாத அவர் கைது செய்யப்பட்ட விதம் மனிதாபிமானமற்றது மற்றும் அமலாக்கத்துறையின் வேலை முறைகள் மிகுந்த கவலையை எழுப்புகிறது.

அமைச்சரின் கைது இந்தியாவின் எதிர்ப்பின் மீதான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாகும், மேலும் இது நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கிறது.பாஜகவின் ஜனநாயக விரோதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நாங்கள் ஒத்துழைப்புடன் இருக்கிறோம் என ஆம் ஆத்மி கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  • We strongly condemn the late night arrest of Tamil Nadu Electricity Minister Senthil Balaji by the Enforcement Directorate. The manner in which he was arrested despite his health condition is inhumane and raises serious concerns about the working methods of the ED. This arrest is… pic.twitter.com/R2mPVxS26u

    — ANI (@ANI) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

செந்தில் பாலாஜியின் கைது தொடர்ந்து சிவ சேனா கட்சியின் எம் பி சஞ்சய்ராவத் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாஜக மீதான புகார்களை ஆதாரங்களுடன் அனுப்புகிறோம். அவர்கள் மீதான விசாரணையை அமலாக்கத்துறையினர் எப்போது தொடங்குவார்கள் என கேள்வி கேட்டார். மகாராஷ்டிர அமைச்சர்கள் 3 பேர் மீது , பணமோசடி தொடர்பான புகார் அனுப்பியும் 3 பேர் மீது அமலாக்கத்துறை பதிலும் அளிக்கவில்லை மற்றும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவர்கள் மீது ரெய்டு இல்லை? என கடுமையாக சாடினார்.

  • #WATCH | ..."We keep sending complaints against their (BJP) people, with evidence. When will the probe against them start?... I sent complaint against 3 ministers of Maharashtra to ED, on money laundering, I have not even received a reply...why there are no raids against… pic.twitter.com/kygCijTFQL

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையினர் விசாரணையில் நெஞ்சு வலி ஏற்ப்பட்டு இன்று (மே 14) அதிகாலையில் சென்னையில் உள்ள ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Senthil Balaji: கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.