ETV Bharat / state

தவிக்கும் தமிழர்கள்: மீட்க மாநிலம் தழுவிய இணையவழிப் போராட்டம்

author img

By

Published : Jun 15, 2020, 1:53 PM IST

சென்னை: வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களை விரைந்து அழைத்து வரக்கோரி மாநிலம் தழுவிய இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.

இணையவழி போராட்டம்
இணையவழி போராட்டம்

வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைத் தாயகம் அழைத்துவருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டிவருகிறது. கரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் பிற நாடுகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், நோயாளிகள், தொழிலாளர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை விரைந்து மீட்க வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பிற நாட்டின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏதுமின்றி பல தொழிலாளர்கள் சாலைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அன்றாட உணவிற்கு அல்லல்படுகின்றனர். அவர்களை விரைந்து மீட்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மாநிலம் தழுவிய இணையவழி போராட்டம்

இதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதற்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இன்று சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: நவம்பர் மாதத்தில் கரோனா உச்சமடையும்: ஐ.சி.எம்.ஆர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.