ETV Bharat / state

"சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்" - அமைச்சர் எ.வே.வேலு! - அமைச்சர் ஏ வே வேலு

E.V.Velu: அண்ணா சாலை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை மற்றும் முக்கிய இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில், அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 10:52 PM IST

சென்னை: கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (செப்.22) நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் சாலைப் பணிகள் குறித்தும், முக்கியமாக சென்னையில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (அதாவது அக்டோபர் மாதம்) முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவு நீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலைகளில் தோண்டும் பணிகள் அனைத்திலும், அக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்" என பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உயர்மட்ட புருவங்களை வெட்டுதல், தாழ்ந்த புருவங்களை நிரப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைகளின் அடிப்படையில் மணல் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், இந்த வருடம் நிரந்தர வெள்ள சீரமைப்புப் பணிகளுக்காக 46 பணிகளுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அனைத்துப் பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும், எச்சரிக்கை பலகைகள், தகவல் பலகைகள் ஆகியவற்றின் இணைப்புகளில் உறுதித்தன்மை சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காப்பீட்டு தொகையை தாமதமாக வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிக்கு அபதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.