ETV Bharat / state

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை - மருத்துவர் முகமது ரேலா

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குழந்தை ஆர்யா
author img

By

Published : Sep 12, 2019, 10:27 PM IST

மும்பையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்துவரும் இளம் பெண் கஷ்பியின் ஒரு மாதக் குழந்தை ஆர்யா. பிறந்த சில நாட்களிலிருந்தே தொடர்ந்து அக்குழந்தை வாந்தி எடுத்து வந்துள்ளது. ஆர்யாவின் உடல் நிலை நாளுக்குநாள் மோசமடையத் தொடங்கியதும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். முதலில் தொற்று நோய் பாதிப்பு என நினைத்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், பின்னர் தீவிர பரிசோதனைக்குப்பின் குழந்தைக்கு வளர்ச்சி சதை நோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தையின் உயிரை காப்பற்ற முடியும் என்பதால் அனுபவமிக்க அறுவை சிகிச்சை மருத்துவரான முகமது ரேலாவை அணுகுமாறு மருத்துவர்கள் யோசனை தெரிவித்தனர். குழந்தை ஆர்யாவை சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழ உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை 10 மணிநேரம் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல், அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை

இதுகுறித்து மருத்துவர் முகமது ரேலா, கூறுகையில்; 'குழந்தைகளுக்கு வளர்ச்சி சதை நோய் இருப்பதைக் கண்டறியும் முன்னரே குழந்தைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தை ஆர்யாவின் நோய் பாதிப்பு குறித்து கண்டறியப்பட்டு, உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது'என்றார்.

குழந்தை ஆர்யாவின் தாய், 'மருத்துவர் பேசியது தங்களுக்கு நம்பிக்கை அளித்ததாகவும், சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Intro:
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Body:
மும்பையைச் சேர்ந்த தம்பதியின் ஒரு மாதக் குழந்தை ஆர்யா, பிறந்த சில நாட்கள் முதலே தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளது. இதனையடுத்து குழந்தை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. முதலில் தொற்று நோய் பாதிப்பு என நினைத்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் பின்பு குழந்தைக்கு வளர்ச்சி சதை நோய் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்தப் பிரச்னையால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய இருப்பதால் கல்லீரல் சிகிச்சையில் கைதேர்ந்த சென்னை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து பேசிய மருத்துர் முகமது ரேலா, குழந்தைகளுக்கு வளர்ச்சி சதை நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் முன்னரே ஏராளமான குழந்தைகள் உயிரிழக்கும் நிலையில், இந்தக் குழந்தை வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். குழந்தையின் தாய் பேசும்போது மருத்துவர் பேசியது தங்களுக்கு நம்பிக்கை அளித்ததாகவும், சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். ((visuals in mail))
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.