சென்னை முகப்பேர் கிழக்கு நக்கீரன் 25ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் அரசு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும், மகனும் சொந்த ஊரான மயிலாடுதுறைக்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் சிலிண்டரை பற்றவைத்துள்ளார். அப்போது சிலிண்டர் கசிவால் வீட்டில் திடீரென்று தீப்பற்றியது. உதவிக்காக ஸ்ரீதர் சத்தம் போட்டுள்ளார். ஸ்ரீதரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் ஸ்ரீதர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெ.ஜெ நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.