சென்னை: அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மேரி (57) என்ற மூதாட்டி இன்று (ஆகஸ்ட். 21) காலை எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியை சுற்றி பார்ப்பதற்காக மெரினா வந்துள்ளார். பின் சரியாக 9:40 மணியளவில் அவர் காமராஜர் சாலையை கடந்து மாநில கல்லூரி பகுதிக்கு வர முயற்சி செய்துள்ளார்.
அப்போது காமராஜர் சாலையின் ஒரு பாதியை கடந்து மறுபாதியை கடப்பதற்காக சென்டர் மீடியனிவில் ஏறி இறங்கியபோது கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி வந்த SBCID கமாண்டோ டெம்போ ட்ராவலர் வாகனம், மூதாட்டியின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரோத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திடீரென மூதாட்டி சாலையை கடந்ததால் வேகமாக வந்த காவல்துறை வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூதாட்டி மீது மோதியதாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் குழந்தை கடத்தல்; 8 மணிநேரத்தில் கூண்டோடு கைது செய்த போலீஸ்!