சென்னையில் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு சற்று உயர்ந்தே காணப்படுகிறது. இருந்தபோதிலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 400-க்கும் குறைவாகவே உள்ளது.
வைரஸ் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரையிலும் இரண்டு லட்சத்து,15 ஆயிரத்து 739 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 183 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள மூன்றாயிரத்து 702 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரத்து 854 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் மண்டல வாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 23,249 பேர்
அண்ணா நகர் - 23,750 பேர்
ராயபுரம் - 19,117 பேர்
தேனாம்பேட்டை - 20,698 பேர்
தண்டையார்பேட்டை - 16,726 பேர்
திரு.வி.க. நகர் - 17,164 பேர்
அடையாறு - 17,160 பேர்
வளசரவாக்கம் - 13,685 பேர்
அம்பத்தூர் - 15,282 பேர்
திருவொற்றியூர் - 6,599 பேர்
மாதவரம் - 8,657 பேர்
ஆலந்தூர் - 8,770 பேர்.
சோழிங்கநல்லூர் - 6,184 பேர்
பெருங்குடி - 7,920 பேர்
மணலி - 3,424 பேர்
இதையும் படிங்க: நாட்டின் கரோனா நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் மரணம்!